செய்திகள்
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று தனியார் பஸ் மோதி பெண் பலி
ஈரோடு பஸ் நிலையத்தில் தனியார் பஸ் மோதி 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று ஒரு மினி பஸ்சில் இருந்து 45 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் இறங்கினார். மினி பஸ்சை விட்டு இறங்கிய அந்த பெண் எதிர் புறம் கடக்க சென்ற போது சேலம் சென்ற ஒரு தனியார் பஸ் எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது மோதியது.
இதில் அந்த பெண் படுகாயத்துடன் துடித்தார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.
பஸ் மோதி பலியான அந்த பெண்ணின் பெயர், ஊர் விபரம் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews