செய்திகள்

போலீஸ் உதவியுடன் லதா ரஜினிகாந்த் கடையை மாநகராட்சி காலி செய்யலாம்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-12-29 05:52 GMT   |   Update On 2017-12-29 05:52 GMT
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் மாநகராட்சி காலி செய்யலாம் என்று ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சென்னை, ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமாக கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா வாடகைக்கு எடுத்து ‘டிராவல்ஸ் எக்சேஞ்ச் இந்தியா’ என்ற பெயரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு வாடகையாக மாதம் ரூ. 3702 செலுத்தி வந்தார். திடீரென கடை வாடகையை ரூ. 21 ஆயிரத்து 160 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மாநகராட்சி அளித்த பதில் மற்றும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

பல ஆண்டுகளாக அந்த இடத்தில் தொழில் செய்து வருவதால் மாநகராட்சி வாடகையை ஏற்பதா? வேண்டாமா? என்று லதா ரஜினிகாந்த் முடிவு செய்து கொள்ளலாம்.

லதா ரஜினிகாந்துக்கு கடை தேவைப்படும் பட்சத்தில் ஒரு மாதத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம்.

ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை எதிர்த்து லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தை நாடலாம் என்பதால், ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடையை காலி செய்யாவிட்டால் காவல்துறை உதவியுடன் அவர் அனுபவித்து வரும் கடைக்குள் சென்று சென்னை மாநகராட்சி காலி செய்யலாம்.

இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News