செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.8 லட்சம் மோசடி: தலைவர்-செயலாளர் கைது

Published On 2017-12-28 06:41 GMT   |   Update On 2017-12-28 06:41 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.8 லட்சம் மோசடி வழக்கில் தலைவர் மற்றும் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிச்சிவாக்கத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த பொன்.முருகேசன் உள்ளார்.

கடந்த ஆண்டு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 10 பேருக்கு விவசாய கடன் வழங்கப்பட்டது. இதில் 8 பேருக்கு போலி நில ஆவணம் மூலம் ரூ.7.91 லட்சம் கடன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க துணை பதிவாளர் வேணு சென்னை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். வணிக குற்ற புலனாய்வு ஆய்வாளர் கீதா மற்றும் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது போலி நில ஆவணம் மூலம் முருகேசன் தனது உறவினர்களுக்கு ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் கடன் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் அவருக்கு சங்க செயலாளர் ஜோசப்ராஜ் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டுறவு சங்க தலைவர் பொன்.முருகேசன், செயலர் ஜோசப்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பொன்.முருகேசன் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News