செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கார் கவிழ்ந்து அய்யப்ப பக்தர்கள் 7 பேர் படுகாயம்

Published On 2017-12-25 16:33 IST   |   Update On 2017-12-25 16:33:00 IST
வத்தலக்குண்டு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 7 அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
வத்தலக்குண்டு:

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு காரில் சென்றனர். சாமி தரிசனம் முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி குறுக்குச்சாலை அ.பிரிவு கன்னிமார் கோவில் அருகே வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர்.

இந்த விபத்தில் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 30), அல்லேந்திரன் (27), சரவணன் (15), கார்த்தி, மற்றொரு சரவணன் (20), ஆகாஷ் (15) மற்றும் டிரைவர் பிரதீபன் (30) ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News