செய்திகள்
மதுரையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைது
மதுரையில் மோட்டார் சைக்கிள் திருடர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை வண்டியூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (வயது 64). இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அதனை யாரோ திருடிச சென்று விட்டனர்.
இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் அப்துல் ஹக்கீம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை தேடி வந்தனர்.
இதில் எஸ்.எம்.பி. காலனியைச் சேர்ந்த கண்ணன் (வயது 19) மற்றும் 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை நகர் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடந்து வருகின்றது. நாள்தோறும் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார்கள் அதிகரித்து வருகின்றன. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.