செய்திகள்
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பெண்கள் பலி
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ரகுமத் நகரை சேர்ந்தவர் சயிராபீவி (வயது 50). இவரது உறவினர் பாத்திமா (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அவர்களின் மோட்டார் சைக்கிள் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலைய மருத்துவமனை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது.
சாலையின் வளைவில் அவர்கள் திரும்ப முயன்றனர். அப்போது கான்கிரீட் மிக்சர் லாரி ஒன்று அவர்களை முந்திச் செல்ல முயன்றது. திடீரென்று லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சயிராபீவி, பாத்திமா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது தொடர்பாக கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.