செய்திகள்
திராவிடர் கட்சியினர் ஒற்றுமையாகவே உள்ளோம்: கி. வீரமணி பேட்டி
திராவிடர் கட்சிகள் பலம் இழந்து விட்டதாக எதிரிகள் கூறி வருகிறார்கள். ஆனால் நாங்கள் ஒற்றுமையாகவே உள்ளோம் என்று கி. வீரமணி கூறினார்.
ஈரோடு:
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணிக்கு இன்று 85-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஈரோட்டில் இன்று பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள வந்த கி.வீரமணி நிருபர்களி டம் கூறியதாவது:-
சாதி வெறி, மத வெறி, மூட நம்பிக்கை, பெண் அடிமையை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.
திராவிடர் கட்சிகள் பலம் இழந்து விட்டதாக எதிரிகள் கூறி வருகிறார்கள். ஆனால் நாங்கள் ஒற்றுமையாகவே உள்ளோம்.
27 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் இன்று என்னை சந்தித்து வாழ்த்து கூறினார். நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.