செய்திகள்

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 27 அடி உயர்ந்தது: கருப்பாநதி அணை நிரம்பியது

Published On 2017-11-30 14:09 GMT   |   Update On 2017-11-30 14:09 GMT
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 27 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
நெல்லை:

தென்மேற்கு வங்கக் கடலில் தூத்துக்குடி அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால் தென்தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு பகுதியில் மிக அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 27 அடி உயர்ந்துள்ளது. இதேபோல் பாபநாசம் அணை 14 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் மொத்த கொள்ளவான 156 அடியில் 148.62 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவான 143 அடியில் 121.50 அடி நிரம்பி உள்ளது. கருப்பாநதி அணை இன்று மாலை முழு கொள்ளளவை எட்டியது.
Tags:    

Similar News