செய்திகள்

மயிலாடுதுறையில் ரெயிலில் கடத்தி வந்த 300 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

Published On 2017-11-30 16:12 IST   |   Update On 2017-11-30 16:13:00 IST
மயிலாடுதுறையில் ரெயிலில் கடத்தி வந்த 300 கிலோ ரே‌ஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் ரெயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தினகரன், தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம் மற்றும் காவலர்கள் சுரேஷ்குமார், நவநீதன், சதிஷ்குமார் ஆகியோர் நேற்று இரவு ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வந்த பயணிகள் ரெயிலில் ஏறி சோதனையிட்டபோது ஒரு பெட்டியில் 15 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை சோதனையிட்டபோது ரே‌ஷன் அரிசி என்பதும் 20 கிலோ வீதம் 15 மூட்டைகளில் 300 கிலோ அரிசியை கடத்தி வந்தவர்கள் போலீசார் சோதனையை கண்டு அதனை விட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நேற்று இரவு திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வந்த பயணிகள் ரெயிலில் சோதனையின்போது கேட்பாரற்று கிடந்த 20 குவார்ட்டர் மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.

Similar News