செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பு: மக்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

Published On 2017-11-30 12:41 IST   |   Update On 2017-11-30 12:41:00 IST
நீதிமன்ற தீர்ப்பினை மக்கள் விமர்சனம் செய்யும் போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தேசிய சட்ட நாள் விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி பேசியுள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய சட்ட நாள் விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

நீதிமன்ற தீர்ப்பினை மக்கள் விமர்சனம் செய்யும் போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆராய்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். அதே போன்று பொது மக்களும் தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை நீதிபதிகள் மீது வைப்பது தவறு.

வழக்கின் உண்மை தன்மையினை புரிந்து வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும். காஞ்சீபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்பட என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

மூத்த வழக்கறிஞர்கள் தங்களிடம் பணிபுரியம் இளம் வழக்கறிஞர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கினால் திறமையான வழக்கறிஞர்களை நாம் இழக்க வேண்டி வராது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி ஜி.கருணாநிதி கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு சட்ட புத்தகத்தை வழங்கினார்.

Similar News