செய்திகள்

ஈரோட்டுக்கு வேலைக்கு வந்த சமையல் தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்

Published On 2017-11-28 11:29 GMT   |   Update On 2017-11-28 11:37 GMT
ஈரோட்டில் சமையல் தொழிலாளி உள்பட 2 பேர் மாயமானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மகன் கேசவன் (வயது 19). இவர் சமையல் வேலைக்காக ஈரோட்டுக்கு வந்தார்.

கடந்த 3-ந் தேதி காலை 9 மணிக்கு ஈரோடு மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தார். மினி பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்து அவரை திடீரென காணவில்லை.

பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மாயமானது குறித்து ஈரோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

மாயமான கேசவன் 5 அடி உயரம் உடையவர். வட்ட முகமும், ஒல்லியான உடல் அமைப்பும் உள்ளவர். வலத முட்டியில் ஒரு காயத் தழும்பு உண்டு.

மாயமான அன்று அவர் வெள்ளை, ரோஸ் நிற கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், நீல நிற பேன்ட்டும் அணிந்திருந்தார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடி தாலுகாவை சேர்ந்தவர் அப்துல் சலாம் (40). இவர் கடந்த 12-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தார்.

சத்தி ரோட்டில் உள்ள சலூன் கடையில் முடி திருத்தம் செய்ய சென்றார். ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை.

அவர் மாயமானது குறித்து ஈரோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மாயமான அப்துல் சலாம் சுமார் 5½ அடி உயரம் கொண்டவர். நீள் வட்ட முகம் உடைய அவரது வலது மணிக்கட்டுக்கு மேல் ஒரு காயத்தழும்பு உண்டு.

மாயமான அன்று அப்துல் சலாம் நீல நிற கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், நீல நிறலுங்கியும் அணிந்திருந்தார்.

கேசவன், அப்துல் சலாம் ஆகிய 2 பேரும் மாயமானது குறித்து ஈரோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News