செய்திகள்

பெங்களூரில் மோசமான வானிலை: 5 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

Published On 2017-11-28 13:15 IST   |   Update On 2017-11-28 13:15:00 IST
பெங்களூரில் மோசமான வானிலை காரணமாக மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூர் செல்ல முடியாத நிலையில் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
ஆலந்தூர்:

பெங்களூரில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. மேலும் வானிலை மோசமாக காணப்பட்டது.

இதையடுத்து நேற்று இரவும், இன்று அதிகாலையும் லண்டன், குவைத், மொரீசியஸ், மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூர் செல்ல முடிநாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 5 விமானங்களும் சென்னையில் தரையிறக்கப்பட்டது. இதே போல் ஐதராபாத்தில் இருந்து பெங்களூர் சென்ற சரக்கு விமானமும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.

இன்று அதிகாலை முதல் பெங்களூர் செல்லும் விமானங்கள் ஒவ்வொன்றாக தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Similar News