செய்திகள்
பனையூரில் எரிசாராயம் குடித்த மேலும் ஒருவர் பலி
பனையூரில், எரிசாராயம் குடித்த மேலும் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பலியானார்.
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரையை அடுத்த பனையூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (36). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் விஜயகுமார் (35), தொழிலாளி.
இருவரும் நேற்று மாலை அதே பகுதியில் ஒருவரிடம் எரிசாராயம் வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே வெங்கடேசன் பலியானார். விஜயகுமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி விஜயகுமாரும் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.