செய்திகள்

பல்லாவரம் அருகே 14 வயது சிறுமியின் திருமணம் நிறுத்தம்: குழந்தைகள் நல வாரியம் நடவடிக்கை

Published On 2017-11-20 15:19 IST   |   Update On 2017-11-20 15:20:00 IST
பல்லாவரம் அருகே 14 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கலைவாணி வயது 14, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவள் அங்குள்ள ஆதி திராவிடர் அரசு பள்ளியில் 8-வது வகுப்பு படிக்கிறாள்.

அய்யப்பன் இறந்து விட்டார். எனவே குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டது. சாந்தி கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மகள் கலைவாணியையும் படிக்க வைக்கிறார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முரளி (25) என்பவருக்கு தனது மகள் கலைவாணியை திருமணம் செய்து வைக்க சாந்தி முடிவு செய்தார். அதை தொடர்ந்து நேற்று காலை வீட்டில் வைத்து எளிய முறையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நலவாரியத்துக்கு (சைல்டு வெல்பர்) தகவல் கொடுத்தனர். அதையடுத்து நேற்று காலை வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவளை மீட்டு காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Similar News