செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தனிப்படை

Published On 2017-11-20 12:57 IST   |   Update On 2017-11-20 12:57:00 IST
காஞ்சீபுரத்தில் மணல் கடத்தலை தடுப்பதற்காக மாவட்ட எஸ்.பி. தலைமையில் தனிப்படை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் இருந்து மணல் எடுக்க தடை விதித்து கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆண்டுதோறும் நவம்பரில் மணல் எடுக்க தடை நீட்டிப்பதாக அறிவிப்பு வரும்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள எந்த நீர் நிலைகளிலும் மணல் எடுக்க தடை நீடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது மாட்டு வண்டிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றில் மணல் திருடப்படுகிறது. மணல் கடத்திய பலர் கைது செய்யப்பட்டனர். பலர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. ஆனாலும் தொடர்ந்து மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹேதிமானி தலைமையில் ஒரு டி.எஸ்.பி., மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

Similar News