செய்திகள்

உலக பாரம்பரிய வாரத்தை ஒட்டி மாமல்லபுரம் சிற்பங்களை இலவசமாக பார்க்கலாம்

Published On 2017-11-20 10:22 IST   |   Update On 2017-11-20 10:22:00 IST
உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி தொல்லியல் துறை பராமரிக்கும் புராதான சின்னங்களை வரும் 25-ம் தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

உலக பாரம்பரிய வாரம் வரும் 25-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதற்காக, தொல்லியல் துறை பராமரிக்கும் புராதான சின்னங்களை வரும் 25-ம் தேதி வரை இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், ஐந்து ரதம் உள்ளிட்டவையை காண ரூ.30 கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாரம்பரிய வாரத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு கண்காட்சி ஆகியவற்றை தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Similar News