செய்திகள்

புவனேஸ்வரி மகன் மீது மேலும் ஒரு வழக்கு

Published On 2017-11-17 12:48 IST   |   Update On 2017-11-17 12:48:00 IST
மருத்துவ கல்லூரி மாணவியை மிரட்டியது தொடர்பாக புவனேஸ்வரி மகன் மீது மேலும் ஒரு வழக்கு கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் (23). சென்னை திருமங்கலத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி அனுகிரஹா (23)வுடன் பேஸ்புக்கில் பழகினார். அவரின் தவறான உள்நோக்கத்தை புரிந்து கொண்ட அனுகிரஹா காதலிக்க மறுத்ததால் கொன்று விடுவேன் என மிரட்டினார். மேலும் அவரின் வீட்டையும் சேதப்படுத்தினார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தேடுவதை அறிந்து மிதுன் தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் கேளம்பாக்கத்தில் மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அனுகிரஹாவை மிரட்டியது தொடர்பாக கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Similar News