செய்திகள்

திருமானூர் அருகே போலி டாக்டர் கைது

Published On 2017-11-16 20:07 IST   |   Update On 2017-11-16 20:07:00 IST
திருமானூர் அருகே உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மேலப்பழுவூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மேலப்பழுவூரில் 13 ஆண்டுகளாக இன்னொருவர் பெயரில் மருந்தகம் (மெடிக்கல்) வைத்து நடத்தி வருகிறார்.

மேலும், உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு அவ்வபோது ஊசி போட்டும், மருந்து, மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இதில், சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் செல்வராஜனுக்கு வந்துள்ளது.

இது குறித்து அவர் நேற்று கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் போலி டாக்டர் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News