செய்திகள்

செங்கல்பட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு - உண்ணாவிரதம்

Published On 2017-11-16 15:06 IST   |   Update On 2017-11-16 15:06:00 IST
செங்கல்பட்டில் இன்று காலை கோர்ட்டுக்கு வந்த வக்கீல்கள் அனைவரும் மீண்டும் பணி புறக்கணிப்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு டவுண் போலீஸ் நிலையத்திற்கு சென்ற பெண் வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்தும், 2 வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் செங்கல்பட்டு கோர்ட்டில் வக்கீல்கள் பணிகளை புறக்கணித்து வருகிறார்கள்.

நேற்று காலை அவர்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கோர்ட்டுக்கு வந்த வக்கீல்கள் அனைவரும் மீண்டும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கோர்ட்டு அருகே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி, செயலாளர் பாலமுருகன், துணை தலைவர் சதீஷ் உள்ளிட்ட வக்கீல்கள் பங்கேற்றனர்.

Similar News