செய்திகள்

அரியலூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது

Published On 2017-11-15 15:50 IST   |   Update On 2017-11-15 15:50:00 IST
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பிழைகள் நீக்கம், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யும் முகாம் வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் நடந்தன. அதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் முழுமையாக சேர்த்தல், பிழைகள் நீக்கம், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் பேரில் அரியலூர் மாவட்டத்தில் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் 1.1.2019 அன்று வாக்காளராக பெயர் சேர்க்கப்பட தகுதி பெறும் (பிறந்த தேதி 2.1.2000 முதல் 1.1.2001 வரை) இளம் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியும் முகாமின் போது மேற்கொள்ளப்படும்.

மேலும் இறந்த வாக்காளர்கள் நீக்கம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Similar News