செய்திகள்
கடற்கரையில் இளம்பெண் பிணம்: தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது
நீலாங்கரையில் இளம்பெண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
திருவான்மியூர் மருதீஸ்வரர் தெருவை சேர்ந்த சினேகா (17). அடையாறு எல்.பி. சாலையில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி சினேகா நீலாங்கரையில் பிணமாக கிடந்தார். உடலை போலீசார் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சினேகா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் சினேகாவும், அவருடன் பணி புரியும் பிரபாகரன் என்பவரும் காதலித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே சினேகா மரணத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர்.
இதைதொடர்ந்து காதலன் பிரபாகரன், சீத்தாராமன் இருவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சீத்தா ராமனை தேடி வருகின்றனர்.