செய்திகள்

டெங்கு காய்ச்சல் உயிரிழப்புக்கு தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம்: ஜி.கே.வாசன்

Published On 2017-11-04 10:31 IST   |   Update On 2017-11-04 10:31:00 IST
தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் டெங்கு மற்றும் மழை வெள்ள பாதிப்புக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளன என்று அரியலூரில் ஜி.கே.வாசன் பேசினார்.
அரியலூர்:

த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் அரியலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் அதிகளவு மழை பெய்து வருகிறது. ஆனால் முறையான வடிகால் வசதியில்லாததால் சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவு வசதியும் செய்து தரவேண்டும். டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.


தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் டெங்கு மற்றும் மழை வெள்ள பாதிப்புக்கு பல உயிர்கள் பலியாகியுள்ளன. சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு தற்போது அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. சாக்கடை அடைப்பு மற்றும் சுகாதார பாதிப்புக்கு முக்கிய காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும்.

வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களை முறையாக தூர்வாராததால் தற்போது பெய்து வரும் மழையில் டெல்டா பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News