செய்திகள்
மழை பாதிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எதுவும் இல்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு
தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகார்களுக்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்னர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், உதவிகள் கோரவும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொது மக்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது. 3 நாட்களில் 350-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் காஞ்சீபுரம் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. நீர்வழிக்கால் வாய்கள் ஆக்கிரமிப்பே வெள்ளத்திற்கு காரணமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டதிற்குட்பட்ட புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை பாதிப்புகள் குறித்த புகார்கள் அதிக அளவில் குவிகின்றன.
பெறப்படும் புகார்கள் மீது அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் பொன்னையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, “மழை வெள்ள முன்எச்சரிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. புகார் மீதும் நடவடிக்கை இல்லை” என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.