செய்திகள்

தேனி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2017-11-02 16:35 IST   |   Update On 2017-11-02 16:35:00 IST
தேனி அருகே தனியார் கடையில் வேலை பார்த்த இளம்பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

தேனி:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வண்டிப்பேட்டையைச் சேர்ந்தவர் சத்குரு மகள் பஞ்சவர்ணம் (வயது 17). இவர் தேனி கம்போஸ்ட் ஓடைத் தெருவில் உள்ள கலா மணி என்பவரது வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற பஞ்சவர்ணம் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கலாமணி உறவினர் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார்.

எங்கும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண் ஏதாவது பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறினாரா? இல்லை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News