செய்திகள்

ஈரோடு: பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம்

Published On 2017-10-23 21:18 IST   |   Update On 2017-10-23 21:18:00 IST
ஈரோட்டில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாணிக்கம் பாளையம், ஹவுசிங்யூனிட் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மகன் மோனீஸ்வரன்( வயது 15). மோனீஸ்வரன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் மோனீஸ்வரன் மாலை வீடுக்கு வந்து விடுவார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு செல்வதாக மோனீஸ்வரன் கூறிவிட்டு செனறார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மோனீஸ்வரன் பெற்றோர்கள் மகனை பல்வேறு இடங்களில் தேடினர்.

எனினும் மோனீஸ்வரன் குறித்து எந்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து அவனது தந்தை சண்முகம் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார்.

மாயமான அன்று மோனீஸ்வரன் சிவப்பு கலர் முழுக்கை சட்டை, நேவி புளுகலர் பேண்ட் அணிந்திருதான். இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகிறார்கள்.

Similar News