செய்திகள்

கவுந்தப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 108 ஆம்புலன்சு டிரைவர் பலி

Published On 2017-10-21 17:00 IST   |   Update On 2017-10-21 17:00:00 IST
கவுந்தப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 108 ஆம்புலன்சு டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக டிரைவர். இவரது மகன் கார்த்திகேயன் (வயது34). 108 ஆம்புலன்சில் டிரைவராக பணிபுரிந்தார்.

நேற்று இரவு கார்த்திகேயன் தனக்கு சொந்தமான காரில் பவானிக்கு சென்று கொண்டிருந்தார். கவுந்தப்பாடி அருகே சேவாகவுண்டனூர் தனியார் பள்ளிக்கூடம் பக்கத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திகேயன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் கார்த்திகேயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கார்த்திகேயன் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கார்த்திகேயனுக்கு மனைவி பிரேமா மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

Similar News