செய்திகள்

அரியலூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-10-12 18:10 IST   |   Update On 2017-10-12 18:10:00 IST
அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் செயலை கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் செயலை கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு ஆட்டோ மற்றும் டாக்சி தொழிலை நசுக்க அக்ரிகேட் முறை, வருடம் ஒருமுறை வாகனத்திற்கு எப்சி எடுக்கும் முறை, கார்ப்ரேட் கம்பெனிகளிடம் ஓட்டுனர் உரிமை வழங்கும் உரிமை ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு வழிகாட்டுதல் படி அரியலூர் பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்திற்கு அரியலூர் பெரம்பலூர் மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்க செயலாளர் குழந்தைவேல், துணை தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினர்.ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்  செயலாளர் தண்டபாணி,சி.ஐ.டி.ï.சி. சிற்றம்பலம் ஆகியோர் துவக்க உரையாற்றினர். மாவட்ட தலைவர் ஜவகர் மத்திய அரசின் தொழில் விரோத சட்டத்தை விளக்கி சிறப்புரையாற்றினார். இக்கண்டன ஆர்ப்பாட்த்தில் கால் டாக்சி உரிமையாளர் சங்க தலைவர் பால சுப்பிரமணியம், மினிலோடு ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் தாமஸ் ஏசுதாஸ், ஆட்டோ உரிமையாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், மினிபஸ் உரிமையாளர் சங்கம், மினிபஸ் ஓட்டுனர் சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News