செய்திகள்

செந்துறையில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2017-10-11 22:15 IST   |   Update On 2017-10-11 22:15:00 IST
செந்துறையில் நடந்து சென்ற பெண்ணிடம் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை முத்து நகரை சேர்ந்த அழகுதுரை மனைவி பழனியம்மாள்(47) இவர் நேற்று மதியம் இரண்டு மணியளவில் அருகிலுள்ள இலங்கச்சேரியில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக செந்துறை- இலங்கச்சேரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் இந்த வழி இரும்புலி குறிச்சி போகுமா எனக் கேட்டுள்ளார் அப்போது போகாது என பழனியம்மாள் பதிலளித்த போதே அந்த இளைஞர் பழனியம்மாளின் முகத்தில் மிளகாய் வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத பழனியம்மாள் கூச்சலிட்டார்.

உடனே மர்ம நபர் பழனியம்மாள் கழுத்திலிருந்த 3 பவுன் செயின் மற்றும் 2 பவுன் செயினை பறித்து கொண்டு பழனியம்மாளை கீழே தள்ளி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் பழனியம்மாள் மீது தண்ணீர் ஊற்றிய பின் நடந்தவற்றை கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செந்துறை போலீஸ் தனி பிரிவு தலைமை காவலர் சஞ்சீவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு அறுந்து கிடந்த 2 பவுன் செயினை மீட்டு பழனியம்மாளிடம் கொடுத்தனர். இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

Similar News