செய்திகள்

ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை விதிகளை மீறிய 323 பேர் மீது வழக்கு

Published On 2017-10-10 19:42 IST   |   Update On 2017-10-10 19:42:00 IST
ஜெயங்கொண்டம் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டனர். அப்போது சாலை விதிகளை மீறிய 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கபட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்து நடப்பதால் அதனை குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டனர்.

அப்போது அதிக வேகம், அதிகபாரம் ஏற்றுவது, போதையில் வாகனம் ஓட்டுவது, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது, லோடு வாகனத்தில் ஆட்களை ஏற்றி  சென்றது, லாரிகளில் அதிக உயரம் பாரம்ஏற்றி சென்றது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை  அணியாமல் ஓட்டியது,

ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவாகனம் ஓட்டியது, பைக்கில் மூன்று பேர் சென்றது,  இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல வகையான சாலை விதிகளை மீறிய 323 பேர்  மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ 40.ஆயிரம் அபராதம் வசூலிக்கபட்டது.

Similar News