செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே லாரி மோதி தொழிலாளி பலி
ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (42). இவர் நேற்று காலை தத்தனூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது உடையார் பாளையம் சந்தையில் இருந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற மினி லாரி சாலையில் நடந்து சென்ற தங்கமணி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தங்கமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து உடையார் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குபதிவு செய்து மினி லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் கணவாய் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன்(27) என்பரை கைது செய்தார்.