செய்திகள்

ரோட்டோர கடையில் குடும்பத்துடன் மதிய உணவு சாப்பிட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Published On 2017-10-01 09:50 IST   |   Update On 2017-10-01 10:28:00 IST
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ஸ்ரீரங்கம் செல்லும் போது தனது குடும்பத்தினருடன் சாலையோர உள்ள ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டார்.
ஈரோடு:

கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா. இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். பெங்களூருவில் இருந்து மைசூர் வழியாக சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் வந்தார். ஆசனூரில் சிறிது நேரம் காரை விட்டு இறங்கி வனப்பகுதியின் அழகை ரசித்தார்.

பிறகு திம்பம் வழியாக மலைப்பாதை வழியாக கீழே இறங்கி சத்தியமங்கலம் வந்தார். அவருக்கு ஆசனூர் போலீசார் பாதுகாப்புடன் கூடவே வந்தனர்.

மதியம் ஒரு ஓட்டலில் சாப்பிட வேண்டும் எங்கே சாப்பிடலாம்? என போலீசாரிடம் கேட்டார்.

அதற்கு அவர்கள் பக்கத்தில்தான் ஈரோடு உள்ளது. அங்கு சாப்பிட்டு விட்டு கரூர் வழியாக நீங்கள் விரைவில் ஸ்ரீரங்கம் போய் விடலாம் என்று கூறினர்.

அதன்படி ஈரோடு வந்த எடியூரப்பா ஈரோட்டில் மேட்டூர் ரோட்டில் உள்ள சாலையோர ஒரு ஓட்டலில் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிட்டார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கண்டதும் பலர் அவரிடம் சென்று நலம் விசாரித்தனர். அனைவரிடமும் அன்புடன் பேசிய எடியூரப்பா,“நீங்கள் நல்லா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

சிலர் எடியூரப்பாவுடன் சேர்ந்து செல்போனில் “செல்பி”யும் எடுத்துக் கொண்டனர்.

“அவரிடம் எங்க ஊர் சாப்பாடு எப்படி?” என்று சிலர் கேட்டபோது, “தமிழக உணவை நான் எப்போதும் விரும்பி சாப்பிடுவேன். டேஸ்ட்டா சூப்பராக இருக்கு” என்று கூறினர்.

சாப்பிட்டு முடித்த குடும்பத்தினருடன் காரில் ஏறி ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார் எடியூரப்பா.

Similar News