செய்திகள்

பெரியகுளத்தில் முதல்வர், துணைமுதல்வர் பேனர் கிழிப்பு

Published On 2017-09-23 17:24 GMT   |   Update On 2017-09-23 17:24 GMT
பெரியகுளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படம் பொறித்த பேனர் கிழிக்கப்பட்டது.

பெரியகுளம்:

பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் படங்கள் பொறித்த பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பேனரை மர்ம நபர்கள் நேற்று இரவு கிழித்து சேதப்படுத்தினர். இன்று காலை போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பேனர் கிழிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தொழிற்சங்க கிளைச் செயலாளர் மணிகண்டன் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் படங்களை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் என இரு கோஷ்டிகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் வேண்டுமென்றே பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிலர் இது போன்ற பேனர் கிழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு போலீஸ் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது மீண்டும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் படங்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News