செய்திகள்
முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து பெண் பலி
முத்துப்பேட்டை அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி ராஜாத்தி (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டிற்குள் புகுந்த ஒரு பாம்பு ராஜாத்தியின் காலில் கடித்தது. இதில் மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜாத்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.