செய்திகள்

பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு: இதுவரை எந்த அரசாணையும் வெளியிடவில்லை- சி.வி.சண்முகம்

Published On 2017-09-23 15:57 IST   |   Update On 2017-09-23 15:57:00 IST
பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், இது குறித்து தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை:

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 24 ந்தேதி பரோல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை கவனிக்க பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரோல் காலம் நாளையுடன் முடியும் நிலையில் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து இருந்தார். பரோல் நீட்டிப்புகான கோப்புகள் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.


இந்த நிலையில் பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. பேரறிவாளனின் பரோலை மேலும் 1 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அந்தத் தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறுத்துள்ளார். 'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து இதுவரை தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News