செய்திகள்

கல்வி சாராத அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கக்கோரி வழக்கு

Published On 2017-09-23 04:00 GMT   |   Update On 2017-09-23 04:00 GMT
கல்வி சாராத அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், ‘கல்வி சாராத அரசியல் நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ-மாணவிகளை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைக்கின்றனர். அவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகூட செய்துகொடுப்பதில்லை. பெற்றோரிடம் அனுமதி பெறுவதில்லை. இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோர் குழந்தைகளை கல்வி கற்பதற்கு தான் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். எனவே, அரசியல் நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

விசாரணையின்போது நீதிபதி, ‘ஆசிரியர்கள் போராட்டத்தின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்களை சில ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். ஆசிரியர்களின் இதுபோன்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தார்.
Tags:    

Similar News