செய்திகள்

தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்: மணியரசன் வலியுறுத்தல்

Published On 2017-09-04 14:06 GMT   |   Update On 2017-09-04 14:06 GMT
நீட் தேர்வுக்கு வாக்குறுதி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காவிரி உரிமை மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வலியுறுத்தி உள்ளார்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் காவிரி உரிமை மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

தற்பொழுது இருக்கும் அரசு மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யவில்லை. 5-ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலையில் 6-வது ஆண்டாக சம்பா சாகுபடியும் இந்த ஆண்டு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

காவிரியிலிருந்து தண்ணீர் பெற்றுத் தர தமிழக அரசு முன் வரவில்லை. எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடி பகட்டை காண்பிக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை காட்டிலும் போலீஸ் பாதுகாப்பை அதிகம் போட்டு கூட்டத்தை நடத்தி தனது செல்வாக்கை உயர்த்த பாடுபடுகிறார். டெல்டா மாவட்டத்திற்கு வரும் முதல்வர் விவசாயிகளை கண்டுகொள்வதில்லை.

மாணவி அனிதா தற்கொலையில் முதல் குற்றவாளி மத்திய அரசு. இரண்டாவது குற்றவாளி மாநில அரசு. அனிதாவின் தந்தை, அரசு அறிவித்த 7 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டார். வாக்குறுதி கொடுத்த ஏமாற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News