செய்திகள்
அரியலூரில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி அரியலூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
அரியலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்லூரியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் மாணவ- மாணவிகளுக்கு குடிப்பதற்கு கூட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அடிப்படை வசதிகளான பராமரிப்பற்ற கழிவறை, குடிநீர் வசதிகளை உடனடியாக சீர்செய்ய வேண்டும். இலவச பஸ் பயண அட்டை மாணவ - மாணவிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் கல்லூரியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து மாணவ-மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிற்றரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் கல்லூரிக்கு இரண்டு நாட்கள் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.