செய்திகள்
ஓணம் பண்டிகை: மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் ஏற்றுமதி அதிகரிப்பு
கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியதை யொட்டி மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வாழைத்தார் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது . மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து தினசரி கேரளா மும்பை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் வாழைக்காய் மண்டிகள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியதை யொட்டி வாழைத்தார் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த 27 -ந் தேதி மார்க்கெட்டுக்கு சுமார் 7500 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன .ஆனால் நேற்று மார்க்கெட்டுக்கு சுமார் 8500 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. மேட்டுப்பாளையம், பவானி சாகர், அன்னூர், அவினாசி, புளியம்பட்டி, மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 300 விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் .
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கேரளா, மைசூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 35 வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கூறினார்கள். கதளி ஒரு கிலோ ரூ.75, நேந்திரன் ஒரு கிலோ ரூ .56, பூவன் வாழைத்தார் ரூ.950, செவ்வாழை ரூ.1100, ரொபஸ்டா ரூ.650, ரஸ்தாளி ரூ.600, மொந்தன் ரூ.500, தேன் வாழை ரூ.350 ல் இருந்து ரூ. 600 வரையும் விற்பனை ஆனது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை யொட்டி மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் வாழைத்தார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் மார்க்கெட்டில் இருந்து 40 டன் வாழைத்தாரும் மார்க்கெட் இல்லாமல் மற்ற பகுதியில் இருந்து மொத்தம் 100 டன் வாழைத்தாரும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஓணம் பண்டிகையை யொட்டி மார்க்கெட்டுக்கு 80 டன் வாழைத்தாரும் மற்ற பகுதியில் இருந்து மொத்தம் 150 டன் வாழைத்தார்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் மும்பை மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மும்பைக்கு கதளி வாழைத்தார் அனுப்பி வைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மற்ற நாட்களில் தினசரி மும்பைக்கு 70 டன் கதளி வாழைத்தார் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது 10 அல்லது 15 கதளி வாழைத்தார் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் மார்க்கெட் மற்றும் மற்ற பகுதிகளில் ரூ.50 லட்சம் கதளி வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் தேக்கம் அடையக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ கதளி ரூ.95 க்கும் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மும்பையில் மழை காரணமாக ஒரு கிலோ ரூ .75க்கு விற்பனையாகிறது. தேக்கம் அடைந்த கதளி வாழைத்தார்களை மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்போது வரத்து அதிகமாக காணப்படும் போது கதளிக்கு நல்ல விலை கிடைக்காமல் விலை குறைந்து காணப்படுகிறது. இதனால் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.