செய்திகள்

புளு வேல் விளையாட்டுக்கு பலியாவது எனது மகனோடு முடியட்டும்: பலியான மாணவரின் தந்தை உருக்கம்

Published On 2017-08-31 04:54 GMT   |   Update On 2017-08-31 04:54 GMT
“புளு வேல்” விளையாட்டுக்கு பலியாவது எனது மகனோடு முடியட்டும் எனவும் இந்த விளையாட்டை இளைஞர்கள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது எனவும் பலியான மகனின் தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.
“புளு வேல்” விளையாட்டுக்கு பலியான மாணவர் விக்னேசின் தந்தை ஜெயமணி, பேக்கரியில் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி டெய்சிராணி, கப்பலூர் தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பணிக்கு சென்று விட்ட நேரத்தில்தான் வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய ஜெயமணி மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

மகனின் இந்த விபரீத முடிவை கண்ட ஜெயமணி கண்ணீர் மல்க கூறியதாவது:-

செல்போன் மூலம் எனது மகன் இப்படி ஒரு விளையாட்டில் ஈடுபட்டது எனக்கு தெரியாது. இந்த கொடூர விளையாட்டுக்கு பலியாவது எனது மகனோடு முடியட்டும். இந்த விளையாட்டை இளைஞர்கள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. உயிர் பலி வாங்கும் “புளு வேலை” அறிமுகப்படுத்தியவர்களை கண்டுபிடித்து தூக்கிலிட வேண்டும்.

எனது மகன் போல வேறு யாரும் இப்படிப்பட்ட விபரீத முடிவை எடுக்கும் முன்பு மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு இந்த விளையாட்டை அழிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News