செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 57 அடியாக உயர்வு

Published On 2017-08-29 12:02 GMT   |   Update On 2017-08-29 12:02 GMT
நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 57 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து அதிகமானது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது சற்று குறைந்ததால் நேற்று அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரத்து 971 கனஅடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் இன்று மேலும் சரிந்து 6 ஆயிரத்து 762 கனஅடியாக குறைந்து விட்டது.

நேற்று அணையின் நீர்மட்டம் 56.47 அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து 57.12 அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் குடிநீர் தேவைக்காக 1300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்தின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்த்து வருகிறது.
Tags:    

Similar News