செய்திகள்

திருமானூரில் மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2017-08-28 22:30 IST   |   Update On 2017-08-28 22:30:00 IST
திருமானூரில் மின் கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் டி.கே.எஸ். நகரில் கோவிந்தன் என்பவர் வீடு கட்டி வருகிறார். நேற்று அந்த வீட்டின் இரண்டாவது தளம் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது.

இதற்காக தற்காலிக ‘லிப்ட்‘ வசதி செய்யப்பட்டு கான்கிரீட் கலவைகள் மேலே கொண்டு செல்லப்பட்டன. மாலையில் பணி முடிந்து தற்காலிக லிப்ட் அகற்றும் பணி நடந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின் கம்பியில் ‘லிப்ட் ரோப்‘ (இரும்பு கயிறு) விழுந்தது.

இதனால், மின்கம்பி அறுந்து 4 வீடுகள் தள்ளி ‘செப்டிக் டேங்க்‘ அமைக்க பள்ளம் தோண்டி கொண்டிருந்த தொழிலாளி முருகேசன்(வயது 54) என்பவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த திருமானூர் போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News