செய்திகள்
நெய்வேலி அருகே வாகனம் மோதி விவசாயி பலி
நெய்வேலி அருகே சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெய்வேலி:
நெய்வேலி அடுத்த மந்தாரகுப்பம் அருகே உள்ள ஏ.குறவன்குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 70) விவசாயி.
இவர் நேற்று மாலை சைக்கிளில் தனது விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தார். சேப்ளாநத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சின்னதுரையின் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சின்னதுரை சம்பவ இடத் திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.