செய்திகள்
மாவட்ட கலெக்டர் கணேஷ்

புதுக்கோட்டையில் மூன்றாம் பாலினத்தினர்க்கான தொழிற் பயிற்சி வகுப்பு: கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2017-08-22 13:03 GMT   |   Update On 2017-08-22 13:03 GMT
புதுக்கோட்டையில் இண்டியன் ஒவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தினர்க்கான தொழிற் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சி திலகர்த்திடல் அருகில் உள்ள இண்டியன் ஒவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சிமையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மூன்றாம் பாலினத்தினர்க்கான தொழிற் பயிற்சி வகுப்பினை மாவட்டகலெக்டர் தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டினை வழங்கி பேசியதாவது:

தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் மா ற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மூன்றாம் பாலினத்தவரும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வரும் வகையில் தொழிற்பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் 21.8.2017 முதல் 31.8.2017 வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மதிய உணவுடன் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் மூன்றாம் பாலினத்தவர்க்கு வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் உடனடி குழம்பு வகைகள், ஊருகாய் வகைகள், ஜீஸ் வகைகள், அப்பளம் வகைகள், மசாள பொடி வகைகள், சோப்பு ஆயில் தயாரித்தல், சோப்பு தூள் தயாரித்தல், ஓம குடிநீர் தயாரித்தல், பினாயில் தயாரித்தல் உள்ளிட்ட 70 வகையான தயாரிப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

மேலும் மானியத்துடன்கூடிய கடன் உதவிகள் வழங்கப்பட உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்க்கு மகளிர் திட்டம் சார்பில் ஒரு சுயஉதவி குழு ஏற்படுத்தப்பட்டு ரூ.2 லட்சம் முழு மானியத்தில் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று தையல் பயிற்சி, எம்ராய்டு, ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்க தமிழக அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கி வருகிறது.

எனவே தமிழக அரசின் இத்தகைய தொழிற் பயிற்சி வகுப்புகளை சிறப்பாக கற்று சுயதொழில் புரிந்து சமுதாயத்தில் மற்றவர்களை போல உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.
Tags:    

Similar News