செய்திகள்

135 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

Published On 2017-08-16 17:11 GMT   |   Update On 2017-08-16 17:11 GMT
கடலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். 135 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தங்களுக்கு உள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடலூர்:

கடலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டில் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என தீர்ப்பு வழங்கினால் சசிகலா பதவி விலகுவாரா?

மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கலந்து கொண்டனர். அதே எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் ஆதரவு உங்களுக்குதான் எனக் கூறினர்.

அமைச்சர்கள் திருத்தப்படுவார்கள் என டி.டி.வி.தினகரன் கூறினார். நாங்கள் யாரும் அடிமை கிடையாது. ஜெயலலிதா தான் எங்களை நியமித்தார். டி.டி.வி.தினகரன் அப்படி கூறுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.

பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றவுடன் எதிர்பாராமல் எனக்கு பொருளாளர் பதவி வழங்கினார். அந்த அடிப்படையில் தான் சசிகலா காலில் விழுந்தேன். அந்த படத்தை தான் டி.டி.வி.தினகரன் வெளியிடுவதாக கூறுகிறார்.

அதேபோல் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றவுடன் என் காலிலும், அமைச்சர் செங்கோட்டையன் காலிலும் விழுந்தார். அந்த படத்தை அவர் வெளியிடுவாரா? 135 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News