செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு நல்லது நடக்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

Published On 2017-08-16 13:44 GMT   |   Update On 2017-08-16 13:44 GMT
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு நல்லது நடக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.
கடலூர்:

கடலூரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முதல்-அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் ‘குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கடுமையான வறட்சி இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறோம். தொழில்துறை, விவசாயத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். யாரைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்’ என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கமல் தொடர்ச்சியாக விமர்சிப்பது ஏன்? என்பதை கமலிடம் தான் கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News