செய்திகள்

ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2017-07-21 20:17 IST   |   Update On 2017-07-21 20:18:00 IST
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையம் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் நிலையம் சார்பில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகஸ்டின் தொடங்கி வைத்தார்.

ஹெல்மெட் அணிவதன் மூலம் விபத்து ஏற்படும் போது நமது தலை பகுதி பாதுகாக்கப்படுகிறது என்பதை பற்றி பொது மக்களுக்கும், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெற்றோர்கள் மோட்டார் சைக்கிளை கொடுக்க கூடாது எனவும், மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்ய கூடாது எனவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வை போலீசார் ஏற்படுத்தினர்.

போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் மீன்சுருட்டி கடைவீதி, நெல்லித்தோப்பு வழியாக ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வரை சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நடேசன், சிதம்பரம் மற்றும் போலீசார், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

Similar News