செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே காலை நேரங்களில் பஸ் வராததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

Published On 2017-07-18 18:21 IST   |   Update On 2017-07-18 18:21:00 IST
ஜெயங்கொண்டம் அருகே காலை நேரங்களில் பஸ் சரிவர வராததை கண்டித்து பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரிலிருந்து கும்பகோணத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தா.பழூர், கோடங்குடி, இடங்கண்ணி, தாதம்பேட்டை, காரைக்குறிச்சி, சிந்தாமணி, அண்ணகாரன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தா.பழூரிலிருந்து கும்பகோணம் செல்லும் அரசு பேருந்துகள் காலை நேரங்களில் சரிவரவருவதில்லை எனவும், இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி மாணவ, மாணவிகள் தா.பழூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தா.பழூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய நேரத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே இதே இடத்தில் மாணவ, மாணவிகள் 2 முறை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Similar News