செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் தவிப்பு

Published On 2017-07-18 16:47 IST   |   Update On 2017-07-18 16:47:00 IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சிகிச்சை பெற பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

ஆலந்தூர்:

சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சங்கீதா (வயது 40).

இவர் ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். சங்கீதாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் பிரிந்து சென்று விட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. தனியார்ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த போது அவருக்கு ரத்த புற்று நோய்இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் உரிய சிகிச்சை பெற பணம் இல்லாமல் சங்கீதா கஷ்டப்பட்டார். சேர்த்து வைத்திருந்த பணம்-நகை முழுவதையும் சிகிச்சைக்காகவே செலவு செய்தார்.

பணம் காலியானதால் அவரால் புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. இதனால் நோயின் தீவிரம் அதிகமானது. கவனிக்க உறவினர்கள் அருகில் இல்லாததாலும் அவரது நிலைமை மேலும் மோசம் அடைந்தது.

இதையடுத்து சங்கீதாவை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிருக்கு போராடும் சங்கீதாவை அவரது தம்பி ஒருவர் கவனிப்பதாக தெரிகிறது. அவரும் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

சங்கீதாவுக்கு தேவையான பண உதவி மற்றும் புற்றுநோய்க்கான சரியான சிகிச்சை கிடைத்தால் மட்டுமே அவர் பழைய நிலைக்கு வர முடியும்.

Similar News