செய்திகள்

செம்மஞ்சேரி அருகே குடிநீர் தகராறில் மோதல்: போலீஸ் பூத் சூறை - 3 பேர் கைது

Published On 2017-07-18 12:45 IST   |   Update On 2017-07-18 12:45:00 IST
செம்மஞ்சேரி அருகே குடிநீர் தகராறு மோதலில் போலீஸ் பூத் சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனார்.

சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி எழில் நகரில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மகன் அரங்கநாதன்.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஏழுமலை குடும்பத்தினருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரை அரங்கநாதன் தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து அரங்கநாதனை போலீசார் கைது செய்து எழில்நகரில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அரங்கநாதனின் தந்தை ஏழுமலை மற்றும் உறவினர் மற்றொரு ஏழுமலை ஆகியோர் போலீஸ் பூத் மீது கல்வீசி தாக்கினர். மேலும் அங்கிருந்த பொருட்களை அரங்கநாதன் சேதப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து அரங்கநாதன், அவரது தந்தை ஏழுமலை, உறவினர் ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News