செய்திகள்

அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

Published On 2017-07-13 16:58 IST   |   Update On 2017-07-13 16:58:00 IST
அரியலூர் மாவட்ட புதிய கலெக்டராக லட்சுமிபிரியா பொறுப்பேற்று கொண்டார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டராக லட்சுமிபிரியா பொறுப்பேற்று கொண்டார். மாவட்ட கலெக்டராக இருந்த சரவணவேல்ராஜ் கடந்த மாதம் பள்ளி கல்வித்துறையின் கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் 2016 முதல் சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த லட்சுமி பிரியா அரியலூர் மாவட்ட கலெக்டராக கடந்த 1-ம் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கடந்த ஒரு மாதமாக மாவட்ட கலெக்டர் பொறுப்புகளை கவனித்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், பொறுப்புகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியாவிடம் ஒப்படைத்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

அரியலூர் மாவட்டத்தை தொழில் துறையில் வளர்ச்சியடையவும், ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவும் பாடுபடுவேன் என்றார்.

மாவட்ட கலெக்டரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும். கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலூரில் உதவி ஆட்சியராக பயிற்சியிலும், மேட்டூரில் சார் ஆட்சியராகவும், கிருஷ்ணகிரியில் கூடுதல் ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சியில் ஆணையராகவும், திருநெல்வேலியில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும், மாவட்ட கலெக்டராக பதவியேற்றுள்ளது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடதக்கது.

Similar News